‘இந்தியாவில் கற்பனைத்திறனுக்கு பஞ்சமே இல்லை’.. ‘ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 12, 2019 06:38 PM

ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ள மண் தரையில் சிறுவர்கள் கேரம் போர்டு விளையாடும் புகைப்படம் வைரலாகி உள்ளது.

Anand Mahindra Shares A Pic Of Kids Playing On A Mud Carrom Board

இந்தியாவில் கற்பனைத்திறனுக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு இதுவே சான்று என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் சிறுவர்கள் சிலர் மண் தரையில் கேரம் போர்டு அமைத்து, நான்கு மூலைகளிலும் குழிகளை உருவாக்கி விளையாடுகின்றனர். சிறிய பாட்டில் மூடிகளை கேரம் காய்களாக வைத்துள்ள அவர்கள் பெரிய மூடி ஒன்றை ஸ்ட்ரைக்கராக வைத்து விளையாடுகின்றனர்.

ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரிடமிருந்து சிறுவர்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

Tags : #ANANDMAHINDRA #VIRAL #PHOTO #BOYS #CARROM #MUD