‘நண்பருக்காக காத்திருந்த சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jun 24, 2019 11:56 AM
ஆந்திர மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்துவரும் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பருக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். நீண்ட நேரம் நண்பர் வராத நிலையில் அருகிலிருந்த கடையில் பணியாற்றும் பாஜி, ஆகாஷ் ஆகியோர் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவர்களுடைய நண்பர்களான 4 பொறியியல் மாணவர்களும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
5 நாட்களுக்குப் பிறகு இவர்களிடமிருந்து தப்பிய சிறுமி போலீஸாரிடம் இதுபற்றிப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பாஜி, ஆகாஷ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர்கள் 6 பேரில் 3 பேர் மைனர் எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் காத்திருந்த சிறுமிக்கு நடந்த இந்த பயங்கரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
