‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 28, 2019 12:34 PM

தன் மனைவி வைத்த மட்டன் குழம்பு நல்லா இல்லை என சொன்ன தந்தையை மகன் அடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bad mutton curry ends with the murder of the father of his son

ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்ல குருப்பா(65). கடந்த ஞாயிற்று கிழமை வீட்டில் மட்டன் குழம்பு சமைத்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து குருப்பா சாப்பிட அமர்ந்துள்ளார். அப்போது மருமகள் சமைத்த மட்டன் குழப்பு பிடிக்கவில்லை என குருப்பா கூறியுள்ளார்.

மேலும் சாப்பாட்டுத் தட்டை கோபமாக மருமகள் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் மருமகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தை குருப்பாவுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது குருப்பாவை அவரது மகன் சுவற்றில் முட்டித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் குருப்பா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் குருப்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ANDHRAPRADESH #FATHER #FOOD #SON #BIZARRE