'பேமிலியையும் இன்றுமுதல் பாருங்க'... 'காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி'... 'கலக்கும் அரசு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 19, 2019 11:34 AM

ஆந்திர காவல்துறையில் பணியாற்றும் பல்வேறு நிலைகளிலான காவலர்கள், மிகவும் எதிர்பார்த்திருந்த வார விடுமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Andhra pradesh police to get weekly offs from today

2019 மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, காவல்துறைக்கு வார விடுமுறை வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி, கான்ஸ்டபிள்கள், ஏட்டுகள், துணை உதவி ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் ஒரு நாள் வார விடுமுறை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, காவல்துறையில் வாராந்திர விடுமுறை என்பதே இல்லை. அவர்கள் ஆண்டு விடுமுறையாக மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்து வந்தது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார், 'இந்த வார விடுமுறை விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த வாராந்திர விடுமுறையால், காவல்துறையினரும் அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும். விடுமுறை நாட்களில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். வாராந்திர விடுமுறை அளிப்பதன் மூலம், வேலை அழுத்தம் குறையும். அவர்கள் உற்சாகத்துடன் பணிக்கு வருவார்கள்’ என்று அவர் கூறினார். இப்புதிய திட்டத்தின்படி 67,804 காவல்துறையினர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #POLICE #ANDHRAPRADESH