'ஆதார் கார்டில் ஏன் சாதி பெயர் இல்ல?'... 'மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்'... 'மணக்கோலத்தில் உறைந்துபோன மணமகள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 25, 2019 05:08 PM

திருமணத்தின்போது, மணமகளின் ஆதார் அட்டையில் சாதிப் பெயர் இல்லாதால், மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man calls off marriage over missing caste name on Aadhaar card

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பெடகாகனியில் கோயில் ஒன்றில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளன. திருமண நேரத்துக்கு முன்னதாக, திருமண தகவல்கள் பதிவு செய்ய மணமக்களின் ஆதார் கார்டுகளை கோவில் புரோகிதர் கேட்டுள்ளார். அப்போது, மணமகள் கொடுத்த ஆதார் கார்டில், மணமகளின் தந்தை பெயருக்குப் பின்னால் அவரது சாதிப் பெயர் இடம் பெறவில்லை.

இதனை மணமகளின் வீட்டாரிடம் புரோகிதர் தெரிவித்துள்ளார். சாதியை ஏமாற்றி திருமணம் செய்வதாக சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார் ஆதார் கார்டு விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் சாதிப் பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்க்கும் வழக்கம் இல்லை என, மணமகள் வீட்டார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத மணமகன் வீட்டார், மணமகளின் சொந்த ஊரிலும் விசாரித்துள்ளனர்.

ஊர் மக்களும் அதே விளக்கத்தை அளித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த மணமகன் வீட்டார், திருமணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளனர். இதையடுத்து காவல் நிலையம் சென்று மணமகள் குடும்பத்தினர் எந்தக் காரணமும் இல்லாமல் திருமணத்தை நிறுத்தி விட்டதாக மணமகன் வீட்டார் மீது புகார் அளித்துள்ளனர்.

Tags : #AADHAARCARD #ANDHRAPRADESH #MARRIAGE