'கண்ண பெருசாக்குனா பயந்துருவோமா?'.. 'நாங்க மட்டும் அங்க வந்தோம்னா'.. பரபரப்பு வீடியோ !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 12, 2019 03:07 PM

வட்டியில்லாக் கடன்கள் தொடர்பாக ஆந்திர சட்டசபையில், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸூக்கும், எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே எழுந்த விவாதம் சூடுபிடித்த காரணத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Ruckus ensued at Andhra assembly JM Reddy Speech - Video

வட்டியில்லாக் கடன்கள் தொடர்பான தவறான தகவல்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவையில் பதிவு செய்வதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்ட, இது தொடர்பான உரிமை மீறல் தீர்மானமும் கொடுக்கப்பட்டது. அதே சமயம், ஜெகன் மோகன் ரெட்டி அளித்துள்ள தகவல்கள் தவறானவை என நிரூபித்தால், ஜெகன் பதவி விலக தயாரா? என சந்திரபாபு நாயுடு நேரடியாகக் கேட்டுள்ளார்.

அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு பதில் கொடுத்த ஜெகன், ‘இதற்கு முன் நீங்கள் பேசும்போது நாங்கள் யாராவது வாய் திறந்தோமா?.. உங்களுக்கான மரியாதையைத் தர வேண்டும் என்பதால் நான் தனியாக நின்று பேசி உங்களை சமாளித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் ஆதரவாளர்கள் 150 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அங்கு(உங்கள் இடத்திற்கு) வந்தால் நீங்கள் தரையில் கூட அமர முடியாது. என்ன பேசுறீங்க?’ என்று காட்டமாக பேசினார்.

மேலும் பேசிய ஜெகன், ‘நீங்க கண்களைப் பெரிதாக்கி, எங்களைப் பாத்தால் மட்டும் நாங்கள் என்ன பயந்துவிடுவோமா? முதலில் உங்கள் ஆதரவாளர்களை அமரச் சொல்லுங்கள்’ என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #CHANDRABABU NAIDU #ANDHRAPRADESH #JAGAN