'இது லிஸ்ட்லயே இல்லயே!'.. சாதிக்கு ஒருவர் என 5 துணை முதல்வர்களா? அதிரடி ஆலோசனையில் முதல்வர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 07, 2019 01:14 PM
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், 5 துணை முதல்வர்களை அவர் நியமிக்கவுள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதன்படி, பழங்குடியினர், ஆதி திராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் காபு மக்கள் உள்ளிட்டோரின் பிரதிநிதிகளாக, இந்த சாதியினத்தவரின் சார்பில் இந்த 5 துணை முதல்வர்களும் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி அவர் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் உள்ள தேடப்பள்ளியில் அமைந்திருக்கும் தனது வீட்டில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, முக்கியமானவர்களுடன் ஆலோசனை நடத்துவதாக தகவலகள் வந்த வண்ணம் உள்ளன. எனினும் யார் அந்த 5 துணைமுதல்வர்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பொறுப்பேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துவரும் நிலையில், மேற்குறிப்பிட்டவாறு 5 துணை முதல்வர்களை நியமித்தால், வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாநிலத்துக்கு 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்ட பெயர் ஆந்திராவுக்கும், இதைச் சாத்தியப்படுத்திய பெயர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.