‘அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்’ .. ஆந்திர முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 15, 2019 01:38 PM

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு தனது வாகனத்தை நிறுத்திய சம்பவம் பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது.

Andhra CM Jaganmohan Reddy stops convoy, allows ambulance to pass

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். அதனால் அவரை வரவேற்பதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கண்ணவரம் விமானநிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது விஜயவாடாவில் உள்ள பேன்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.

இதனைப் பார்த்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக அனைத்து வாகனங்களையும் சாலை ஓரமாக நிறுத்த உத்தரவிட்டார். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் அவர்களை கடந்து சென்றதும், 5 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags : #JAGANMOHANREDDY #ANDHRAPRADESH #AMBULANCE