சென்னை: 'குப்பை லாரி மோதியதில்'.. 'நசுங்கிய உடல்!'.. நள்ளிரவில் காவலருக்கு அரங்கேறிய சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 21, 2019 05:18 PM

குப்பை லாரி ஏறியதால் உடல் நசுங்கி, காவல்துறை ஏட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chennai police man dies after municipality lorry hits him

மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட காவலர் பழனிக்குமார் சென்னை கொடுங்கையூர் மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவிலும், தலைமை காவலராகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விமலா மற்றும் இவரது 3 பெண் குழந்தைகளும் இவருடனேயே சென்னை மவுண்ட் காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்துள்ளனர்.

இந்த நிலையில் காவலர் பழனிக்குமார் தனது பணி முடிந்து நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கொடுங்கையூர் மகாகவி பாரதியார் நகர் பணிமனை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அடுத்த நொடியே அவர் மீது சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் லாரி அவரது மீது ஏறியதால், அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CHENNAI #POLICE