'1 டன்... 2 டன் இல்ல... 3350 டன் தங்கம்!'... 'தங்க வேட்டை'க்குத் தயராகும் 'இந்தியா!'... உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், 3, 350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, இரண்டு சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்திரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் தற்போது, 626 டன் தங்கம் கையிருப்பு உள்ள நிலையில், உத்திரப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், நம் நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம், அமெரிக்காவிடம் 8133 டன்னும், ஜெர்மனியிடம் 3366 டன்னும், சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்-இடம் 2814 டன்னும் தங்கம் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.