'யார் சாமி இவரு?'... 'அயன் சூர்யாவுக்கே டஃப் குடுப்பாரு போலயே!'... 'தங்கம் கடத்த புது ரூட்டு!'... 'ஆடிப்போன அதிகாரிகள்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 04, 2020 03:29 PM

மலக்குடலில் வைத்து 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தியவர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

person who tried to smuggle gold in his rectum caught

சட்டத்துக்கு புறம்பான முறையில், தங்கம் மற்றும் போதைப் பொருட்களை கடத்துவதும், கடத்திக் கொண்டுவருவதும் அவ்வப்போது விமான நிலையங்களில் நடக்கும். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில், சுமார் 351 கிராம் தங்கத்தை ஒருவரிடம் இருந்து காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதில் ஆச்சரியமான நிகழ்வு என்னவென்றால், குற்றவாளி தனது மலக்குடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். அவரை லாவகமாக பிடித்த விமான நிலைய காவலர்கள், சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டவரை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மலக்குடலில் வைத்து தங்கம் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAIAIRPORT #GOLD #SMUGGLING