‘பினாயிலை எடுத்து மகள் குடிக்க முயல...’ ‘அம்மா எடுத்த அதிர்ச்சி முடிவு...’ நகைக்காக நடந்த சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 17, 2020 11:51 AM

சொந்த மகளுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஏழாவது மாடியிலிருந்து குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother suicides due to fighting with daughter

பரபரப்பு நகரமான மும்பையின் ஒருஅடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலிசார் சம்பவம் நடைபெற்ற பகுதி சென்று விசாரணை மேற்கொண்ட போது சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியே வந்தது.

விசாரணையில் அம்மாவிற்கும், மகளுக்கும் கொஞ்சம் நாட்களாகவே ஒரு பரஸ்பர புரிதல் இல்லாமல் வந்துள்ளது. மேலும் இருவருக்கும் இடையே தங்க நகைக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிப் போன நிலையில், மனவருத்தம் அடைந்த 31 வயது மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட வீட்டிலிருந்த தந்தை மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மனைவியை காணவில்லை என குடியிருப்பு முழுவதும் தேடி அலைந்துள்ளார். அதன்பிறகே தன் மனைவி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அவருக்கு தெரியவந்தது. போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #GOLD