‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 04, 2019 05:27 PM

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man out on bail in molestation case, stabs teen to death over 30 times

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தற்காக சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து புகார் கொடுத்த சிறுமியின் நடவடிக்கையை தினமும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் வெளியே செல்வதை பார்த்த சிவக்குமார், வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் சிவக்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிவக்குமாரை மடக்கி பிடித்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் சிறுமியின் உடலில் 30 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் ஜாமினில் வந்து புகார் கொடுத்த சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #SEXUALABUSE #MURDER #KILLED #BAIL #MADHYAPRADESH #JABALPUR #GIRL #DIES