திருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 06, 2019 01:29 PM

திருமணத்தின்போது நடனமாடுவதை நிறுத்தியதற்காக இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video UP Woman Shot In Face When She Stopped Dancing At Marriage

உத்தரப் பிரதேச  மாநிலத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்வில் இளம்பெண் ஒருவர் தன் குழுவினருடன் நடனமாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்தப் பெண் ஒரு நிமிடம் நடனமாடுவதை நிறுத்த, பார்வையாளர்கள் வரிசையில் மதுபோதையுடன் இருந்த ஒரு நபர் அவரை சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். அதைக் கேட்டு அருகிலிருந்த மற்றொரு நபரும் அவரை சுடச் சொல்லிக் கத்தியுள்ளார்.

பின்னர் அடுத்த நொடி மதுபோதையில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட, அந்தப் பெண் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து சுடப்பட்டதில் முகத்தில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் துப்பாக்கியால் சுட்ட நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #UTTARPRADESH #MARRIAGE #GIRL #DANCE #GUN #SHOT #VIDEO #VIRAL