‘திருமணத்திற்கு’ மறுத்த காதலி.. ‘ஆத்திரத்தில்’ இளைஞர் செய்த காரியம்.. ‘கோவையில்’ நடந்த அதிர்ச்சி சம்பவம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 02, 2019 01:24 PM

கோவையில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Coimbatore Man Arrested For Sharing Lovers Obscene Photos In FB

கொடைக்கானலைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் திருப்பூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவர் சமீபத்தில் தனது பள்ளியில் படித்த பெண் ஒருவரை சந்தித்தபோது அவரிடம் செல்ஃபோன் எண் வாங்கியுள்ளார். அந்தப் பெண் கோவையில் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே சூலூரில் உள்ள மில்லில் வேலை செய்துவரும் நிலையில், இருவரும் பேசிப் பழகியதில் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

பின்னர் அந்தப் பெண் தனது அந்தரங்க படங்களை அஜித்குமாருடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அஜித்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே அந்தப் பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். தன்னை திருமணம் செய்ய அந்தப் பெண் மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவருடைய அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை அஜித்குமார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அஜித்குமாரைக் கைது செய்துள்ளனர். அவர்மீது ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #FACEBOOK #COIMBATORE #GIRL #LOVER #PHOTO #VIDEO #MARRIAGE