8 வயது சிறுமியின் அறைக்குள்... ‘திடீரென’ கேட்ட ‘ஆண்’ குரல்... தாய்க்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 13, 2019 07:37 PM

சிறுமியின் அறையில் பொருத்தப்பட்ட கேமராவை ஹேக் செய்த மர்ம நபர் ஒருவர் அவருடன் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Man Hacks CCTV Camera Installed In Girls Room Harasses Her

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி லிமே. செவிலியரான அவர் அடிக்கடி இரவு நேரம் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவரால் தன்னுடைய 8 வயது மகளை சரிவர கவனிக்க முடியாமல் போக, அதற்காக மகளின் அறையில் பிரத்யேக கேமரா ஒன்றை அவர் பொருத்தியுள்ளார். அந்தக் கேமரா மூலமாக கண்காணிப்பது மட்டுமல்லாமல், உடன் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கரால் மகளுடன் ஆஷ்லியால் பேசவும் முடியும்.

இந்நிலையில் ஒருநாள் ஆஷ்லியின் மகள் யாரோ ஒருவர் தன்னுடன் கேமரா வழியாக பேசுவதாகக் கூற அவர் அதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துப் பார்த்தபோது, மகள் கூறியதைப் போலவே மர்ம நபர் ஒருவருடைய குரல் கேட்டுள்ளது. கேமரா வழியாக பேசிய மர்ம நபர் சிறுமியிடம், நான் சாண்டா கிளாஸ் நான் உன்னுடைய நண்பன் எனக் கூற சிறுமி யார் நீங்கள் எனத் திருப்பிக் கேட்கிறார். அதற்கு அவர் மீண்டும் நான் சாண்டா கிளாஸ், உனக்கு என் தோழியாக இருக்க விருப்பமில்லையா எனக் கேட்கிறார். மேலும் அவர் தொடந்து பேசி சிறுமியை தொந்தரவு செய்கிறார்.

இதைத்தொடர்ந்து ஆஷ்லி லிமே உடனடியாக அந்தக் கண்காணிப்பு கேமராவை நீக்கியுள்ளார். இதுகுறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள கேமரா நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் எனவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

Tags : #CCTV #MOTHER #GIRL #CAMERA #HACKER