'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ?'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Dec 20, 2019 03:25 PM

இணையதளங்களில் நாளும் நாளும் புதிய வீடியோக்கள் அரங்கேறுகின்றன. அவற்றுள் வித்தியாசமான வீடியோக்கள் எப்போதும் இணையதளங்களில் ஹிட் அடிப்பது உண்டு. அப்படித்தான் இளைஞர் ஒருவர் பதிவிட்ட வீடியோ ஒன்று  டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.

hand free technique of unlocking phone? giels viral act video

டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் போன்களில் மென் பொருள் மூலமாக போன் லாக் ஆகிவிட்டால், அவற்றின் பாஸ்வேர்டினை பதிவிட்டு அன்லாக் செய்யலாம். ஆனால் அப்படி லாக் ஆன ஒரு ஸ்மார்ட் போனில், கைகளை பயன்படுத்தாமலேயே பாஸ்வேர்டினை பதிவிட்டு, போனை அன்லாக் செய்கிறேன் பாருங்கள் என்று சொல்லி, இளம் பெண் ஒருவர் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்கிறார்.

அதன்படி, ஒரு ரெஸ்டாரண்டின் டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டிருக்கும் அந்த இளம் பெண், தன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டுவிட்டு, மேஜையில் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை வைத்திருக்கிறார். அதில் கீ பேடில் பாஸ்வேர்டு கேட்கிறது. இந்த இளம் பெண்ணோ ஒவ்வொரு நம்பர் மீதும் எச்சிலை உமிழ்ந்து பாஸ்வேர்டினை பதிவிட்டு போனை அன்லாக் செய்கிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த

பலரும் விதவிதமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பெண்ணின் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்ட அந்த நபர்,  ‘என் காதலியை வெளியில் அழைத்துக்கொண்டு போன கடைசி நாள் இதுதான்’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.

Tags : #VIDEOVIRAL #GIRL