'கையில் டாட்டூ.. ஆண் வேடத்தில் வீடியோ!'.. கணவரை உதறிவிட்டு, டிக்டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்த மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 16, 2019 11:32 AM
ஆந்திராவில் டிக்டாக் மூலம் அறிமுகமான சகோதரியின் தோழியுடன், திருமணமான பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவ ஆந்திராவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் அர்ச்சனாவிற்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகியுள்ளன. இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அர்ச்சனாவின் பாசமிகு கணவர் ஆசையாக வாங்கித் தந்த ஸ்மார்ட்போனில் அர்ச்சனான் டிக்டாக் முயற்சி செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் டிக்டாக் என்கிற அந்த கடலில் மூழ்கித்தான் போனார் அர்ச்சனா. அதில் அர்ச்சனாவின் சகோதரியின் தோழி அஞ்சலி என்பவர் டிக்டாக் வழியாக அர்ச்சனாவுக்கு தோழியாகியுள்ளார். அர்ச்சனாவின் பெயரை அஞ்சலி தன் கையிலும் பச்சை குத்தும் அளவுக்கு இவர்களின் நட்பு ஆழமாகியுள்ளது. டிக்டாக்கில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்த அர்ச்சனாவின் வீட்டுக்கு, அவ்வப்போது அஞ்சலி வரத்தொடங்கியதால் ரவிச்சந்திரன் அர்ச்சனாவை கண்டித்ததுடன், அர்ச்சனாவின் ஸ்மார்ட் போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.
விளைவு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சென்ற அர்ச்சனா அங்கும் தனது டிக்டாக் வேலைகளை ஆரம்பித்துள்ளார். அப்போது அவரது பெற்றோரும் இதனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு அஞ்சலியுடன் அர்ச்சனா ஓட்டம் பிடித்துள்ளார். பெண்ணாக இருந்தபோதிலும் ஆணைப் போல் மீசை வைத்துக்கொண்டு டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு அர்ச்சனாவை காதல் வலையில் வீழ்த்திய அஞ்சலியுடன் அர்ச்சனா ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
