'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 03, 2019 12:02 PM

சென்னையில் 10 வயது சிறுமிக்கு, 73 வயது முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 year old girl sexually abused by 73 year old man

சென்னை அம்பத்தூரை அடுத்த லெனின் நகர், 2-வது மெயின் ரோட்டில் வசித்து வரும் தம்பதிகளுக்கு,  10 வயது மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்த சிறுமிகள் இருவரும் வழக்கம் போல், கடந்த 30-ம் தேதி இரவு வீட்டிலிருந்து அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். 10-வது மெயின்ரோடு வழியாக இவர்கள் நடந்து வந்தபோது, அதேப் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தர மூர்த்தி (73) என்பவர் 10 வயது சிறுமியை தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது, அங்கு யாரும் இல்லாததால் சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டதுடன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த 2 சிறுமிகளும் அலறி கூச்சலிடவும், சுந்தர மூர்த்தி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், சிறுமிகளை மீட்டு அவர்களது வீட்டில் பத்திரமாக கொண்டு சேர்த்தனர். வீட்டிற்கு வந்த சிறுமி, அவரது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சுந்தர மூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான சுந்தர மூர்த்தியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : #ABUSE #GIRL #MAN #OLD #CHENNAI