'மழையில் திறந்துகிடந்த பாதாள சாக்கடை'... 'மூழ்கிய பைக்கை மீட்க போராடிய வீடியோ'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Jul 08, 2019 04:28 PM
மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக, மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடையில் பைக் ஒன்று மூழ்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரவலாக மழை பெய்தாலும், புறநகர் பகுதிகளான தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழையால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு இருந்து கிளம்பும், வந்து சேரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக, சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கு பழைய ஜால்னாவில் சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை ஒன்றில், மழை நீர் காரணமாக பைக் ஒன்று மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாக பரவி வருகின்றது.
Award winning pothole of the year 2019.... capable of swallowing a full 2 wheeler ! #MumbaiRainsLiveUpdates #MumbaiRainlive #potholes #mumbairainswithmidday pic.twitter.com/gIDhbmOoiA
— Sanjeev Ghanate (@ghanate_sanjeev) July 7, 2019
