‘இப்டி அவுட் பண்ணுவாருனு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க’.. வேறலெவல் கேட்ச் பிடித்து அசத்திய ‘தல’ தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 06, 2019 05:48 PM

இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி மூன்று கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார்.

WATCH: MS Dhoni takes stunning catch against Sri Lanka

இந்தியா-இலங்கைக்கு இடையேயான போட்டி ஹெட்டிங்லே  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான திமுத் கருணாத்னே மற்றும் குசல் பேரேரா களமிறமிறங்கினர்.

இதனை அடுத்து பந்துவீச ஆரம்பித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பம் முதலே இலங்கையை திணறடிக்க ஆரம்பித்தனர். இதில் 4 ஓவரை வீசிய வேகபந்து வீச்சாளர் பும்ரா இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாத்னேவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை பும்ரா அடைந்தார். அதனைத் தொடர்ந்து 8 ஓவரில் குசல் பேரேராவின் விக்கெட்டை வீழ்த்தியும் பும்ரா அசத்தினார். இதனை அடுத்து ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னண்டோவின் விக்கெட்டை தோனி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இப்போட்டியின் முதல் மூன்று விக்கெட்டுகளை தோனி கேட்ச் பிடித்து அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #ICC #BCCI #MSDHONI #RAVINDRA JADEJA #HARDIKPANDYA #BUMRAH #CWC19 #TEAMINDIA #SLVIND #INDVSL #VIRALVIDEO #HAPPYBIRTHDAYDHONI