‘தோனி அணியில் இருப்பார் ஆனால்..’ ஓய்வு குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 17, 2019 11:31 AM

உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு தோனி ஓய்வு பெறலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் அணியில் தொடர்வார் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

MS Dhoni wont be first choice wicket keeper but will help team

தோனி ஓய்வு குறித்து வெளியாகியுள்ள செய்திகளால் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருவேளை அவர் ஓய்வு பெறாவிட்டாலும் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் பிசிசிஐ தரப்பிலிருந்து, “தோனி அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க மாட்டார். இந்திய அணியின் முதல் விருப்ப விக்கெட் கீப்பராகவும் இனி அவர் தொடர மாட்டார். ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார். அதே சமயம் ரிஷப் பந்த் பயிற்சி பெற தோனி உதவுவார்.

அதாவது தோனி அணியில் இருப்பார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இல்லாமல் 15 பேரில் ஒருவராக இருப்பார். அனைத்து போட்டிகளிலும் அவர் களமிறங்காமல் அணிக்கு வழிகாட்டும் நபராக தொடர்வார்” எனக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் தோனி பங்கேற்க இருப்பதால் அதுவரை அவர் ஓய்வு பெற விரும்ப மாட்டார் எனவும் கூறப்படுகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #MSDHONI #VIRATKOHLI #BCCI #WICKETKEEPER #RISHABHPANT