‘ஐஃபோனுக்காக சிறுவர்கள் செய்த..’ அதிர வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 16, 2019 01:17 PM

டெல்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஐஃபோனுக்காக நண்பனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 teenagers arrested for killing 15-year-old boy for iPhone

டெல்லி மோதி நகர் பகுதியில் வசித்து வந்த விக்கி (15) என்ற சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். இரண்டு நாட்களாகத் தேடியும் சிறுவன் கிடைக்காததால் அவருடைய பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில் பசாய் தாராபூர் பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு சிறுவனின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் அது விக்கி தான் என உறுதி செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இதுதொடர்பாக மூன்று சிறுவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் விக்கியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அந்தச் சிறுவர்கள் நண்பனான விக்கி வைத்திருந்த ஐஃபோனை தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டுள்ளனர். அதற்கு மறுத்த விக்கி செல்ஃபோனைக் கொடுக்காததாலேயே கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் சிறுவர்கள் மூன்று பேரும் சிறார் சட்டத்தின்படி விசாரணைக்குப் பிறகு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஐஃபோனுக்காக மூன்று சிறுவர்கள் நண்பனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #DELHI #IPHONE #TEENAGERS #FRIEND #MURDER