உங்கபேரு ஜெயராமனா? ஜெயகுமாரா?... பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு... சக அமைச்சரின் அல்டிமேட் மேடைப்பேச்சு
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 09, 2020 11:42 AM
சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சரோஜா, சக அமைச்சரான ஜெயக்குமாரின் பெயரை ஜெயராமன் என மாற்றி அழைத்தது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை ஜெயக்குமார், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சரோஜா, "மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே" என தவறுதலாக கூறிவிட்டார். அதன் பின்னர் அமைச்சரின் இலாகாவை தான் தவறாக கூறிவிட்டதை உணர்ந்து, சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.
ஆனால், அப்போதும், "மீன்வளத்துறை அமைச்சர் ஜெயராமன் அவர்களே" என மீண்டும் தவறுதலாக கூற மேடையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் "பசி மயக்கமா" என கேட்க அமைச்சர் சரோஜாவும் "ஆம் பசி பசி" என பதிலளிக்க அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
