‘4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை’... ‘பெண் மருத்துவரின்’... ‘தந்தை உருக்கமான வார்த்தை’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 06, 2019 09:22 AM

பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளின் என்கவுண்டர் குறித்து, தனது மகள் பற்றி அவரது தந்தை உருக்கமான வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.

priyanka father reaction on encounter soul must be peace now

இதுகுறித்து பிரியங்கா ரெட்டியின் தந்தை கூறியுள்ளதாவது, ‘எனது மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. தற்போது என்கவுண்டரில் குற்றவாளிகள் கொல்லப்பட்டதற்காக தெலுங்கானா அரசு மற்றும் காவல்துறையினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதாவது எனது மகள் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இதனால் அவர் எப்போதும் தனது ஸ்கூட்டியில் சென்று, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச் சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல், கடந்த மாதம் 27-ம் தேதியும் சுங்கச் சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த முகமது பாஷாவின் கும்பல் நோட்டமிட்டு, பெண் மருத்துவரின் வண்டியை பஞ்சராக்கியுள்ளனர்.

பின்னர் பெண் மருத்துவரின் வருகைக்காக காத்திருந்த அவர்கள், அவர் வந்ததும் இரவு 9 மணியளவில் அவருக்கு உதவுவதுபோல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற 4 பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த 4 பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

Tags : #PRIYANKAREDDY #ENCOUNTER #DAD #DAUGHTER