'ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை'...'என்கவுன்ட்டர்' நடந்தது எப்படி'?...வெளியான பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 06, 2019 09:03 AM

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

How the 4 Accused in Priyanka Reddy Rape, Murder were encountered?

இதனையடுத்து 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. காவல்துறையினரும் இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றவாளிகள் 4 பேரும்  என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். எவ்வாறு 'என்கவுன்ட்டர் நடைபெற்றதது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை ஹைதராபாத் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான '44'யில், மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று, எப்படி கொலை நடைபெற்றதது என்பது குறித்து நடித்து காட்ட கூறியுள்ளார்கள். அப்போது நடித்து காட்டி கொண்டிருந்த போது திடீரென 4 பேரும் தப்பி ஓட முயற்சித்துள்ளார்கள். அப்போது அங்கிருந்த காவலர் அவர்களை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரையும் தாக்கி விட்டு 4 பேரும் தப்பி ஓடியுள்ளார்கள்.

இதனால் வேறு வழியின்றி 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டு கொன்றுள்ளார்கள். என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொன்டு வருகிறார்கள்.

Tags : #SEXUALABUSE #RAPE #MURDER #POLICE #ENCOUNTER #HYDERABAD GANGRAPE #NH-44 #VETERINARIAN DOCTOR #CYBERABAD POLICE