‘15 நாளே பெண் குழந்தை’... ‘தாய்க்கு தெரியாமல்’... ‘தந்தை செய்த அதிர்ச்சி காரியம்’... ‘5 பேரை கைதுசெய்த போலீசார்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 21, 2019 04:49 PM

பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்றதாக, குழந்தையின் தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 arrested including dad for sold his daughter in nellai

நெல்லை மாவட்டம் ஆறுமுகம்பட்டியைச் சோ்ந்தவர்கள் ஏசு இருதயராஜ் (40) - புஷ்பலதா (35). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு, புஷ்பலதாவிற்கு 4-வதாக பிரசவம் நடைப்பெற்றது. இந்த பிரசவத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் கவலை அடைந்த ஏசு இருதயராஜ், தனது இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தையை மட்டும் விற்க முடிவு செய்தார்.

பின்னர் ஆலங்குளத்தைச் சோ்ந்த தங்கராஜ் என்பவருக்கு சுமார் 1.25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 35,000 ரூபாய் மதிப்புள்ள தங்கசெயினுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு, விற்பனை செய்த குழந்தையை மீட்டனர். அதன்பிறகு, ஆலங்குளத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற, குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை கொண்டுபோய் போலீசார் ஒப்படைத்தனர்.

பின்னர், குழந்தையின் தந்தை ஏசு இருதயராஜ், தங்கராஜ் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.42,000 ரொக்கம் மற்றும் தங்க செயினை பறிமுதல் செய்துள்ளனர். குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அதனுடைய தாய் புஷ்பலதாவுக்கோ, அதனை விலை கொடுத்து வாங்கிய தங்கதுரையின் மனைவிக்கோ தெரியாது என போலீசார் கூறியுள்ளனர்.

Tags : #DAD #DAUGHTER #SELL