‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 26, 2019 12:18 PM

இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலி மற்றும் அவருடைய மகள் சனா இடையேயான ஜாலியான உரையாடல் ஒன்று வைரலாகியுள்ளது.

Sourav Gangulys Funny Banter With Daughter Sana Goes Viral

பிசிசிஐ தலைவராக பதவியேற்றதில் இருந்தே அடுத்தடுத்து பல சீர்திருத்தங்களை செய்யத் தொடங்கிவிட்டார் சவுரவ் கங்குலி. அதில் முதலாவதாக நீண்ட நாட்களாக பகலிரவு போட்டிகளில் விளையாடமல் இருந்த இந்திய அணியை அதில் விளையாட வைத்துள்ளார். மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்த பகலிரவு போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட தன் புகைப்படம் ஒன்றை கங்குலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய போஸை கிண்டல் செய்யும் விதமாக அவருடைய மகள் சனா, “உங்களுக்கு எது பிடிக்கவில்லை?” என கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள கங்குலி, “நீ மிகவும் கீழ்ப்படியாமல் இருப்பதுதான்” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு சனா, “எல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்” என பதில் கமெண்ட் செய்துள்ளார். சவுரவ் கங்குலி மற்றும் அவருடைய மகளுக்கு இடையேயான இந்த ஜாலியான உரையாடல் தற்போது வைரலாகியுள்ளது.

Tags : #CRICKET #SOURAVGANGULY #INSTAGRAM #DAUGHTER #SANA #VIRAL