'போதையால் விபரீதம்'.. 'நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு'.. தந்தை செய்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 26, 2019 01:43 PM
சென்னையைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு, அப்பெண்ணின் அப்பாவும், அவரது நண்பரும், நண்பரின் இள வயது மகனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மது கொடுத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தங்கள் தாய் இறந்துவிட, 8-ஆம் வகுப்பு படித்த அந்த இளம் பெண், தனது 2 சகோதரர்களையும், தந்தையையும் கவனித்து வந்துள்ளார். அவருடைய தந்தை லோகநாதன் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியதோடு மகளிடமே தவறாக நடந்துகொள்ள முயன்றதற்காக மகன்களால் கண்டிக்கப்பட்டார்.
ஆனால் மகன்கள் வெளியில் சென்ற நேரம் பார்த்து, லோகநாதன், அவருடைய நண்பர் அய்யாவும், அய்யாவுவின் மகன் மணி மூவரும் சேர்ந்து லோகநாதன் வீட்டிற்கு வந்து போதை மருந்து உட்கொண்டுவிட்டு, அப்பெண்ணுக்கு மதுகொடுத்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது லோகநாதனின் மகன் அங்கு வந்துவிடவே 3 பேரும் தப்பி ஓடினர்.
இந்த கோர சம்பவத்தை அடுத்து, அப்பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 3 பேரையும் தேடிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.