'ஸ்கூல் வாசல் முன்பு'... '5 வயது மகள் கண்முன்னே'... 'இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்'... 'உறைய வைக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 05, 2019 10:28 PM

5 வயது மகள் கண்முன்னே இளம் ஆசிரியை ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young teacher shot dead in front of her 5 year old daughter

பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்தவர் சரப்ஜித் கவுர் (35). பிரெஞ்ச் மற்றும் பஞ்சாபி மொழிப் பாடப் பிரிவு ஆசிரியரான இவர், இன்று காலை சுமார் 7.45 மணியளவில், வழக்கம்போல் தான் பணிபுரிந்து வரும், தி நாலட்ஸ் பஸ் குளோபல் பள்ளிக்கு, தனது 5 வயது மகளுடன் சென்றார். அங்கு வளாகத்திற்கு வெளியே இருந்த பார்க்கிங் ஏரியாவில், தனது மகளை இறக்கி விட்டுவிட்டு, ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு திரும்பியுள்ளார். அப்போது அவரை, யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன சரப்ஜித்தின், 5 வயது மகள் அலறியடித்துக் கொண்டு கேட்டிற்கு உள்ளே ஓடிச் சென்றார். துப்பாக்கியால் சுடப்பட்டதில், சரப்ஜித் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், பள்ளி கேட்டை மூடிவிட்டு, உடனடியாக  ஆசிரியை சரப்ஜித்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 3 குண்டுகள் பட்டதில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சரப்ஜித்திற்கும், ஹர்வீந்தர் சிங் என்பவருக்கும், கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர், கணவரின் வேலை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டிற்கு, கணவருடன், சரப்ஜித் சென்றுள்ளார். கணவர் வேலைக்கு சென்று விட, தனியாக இருந்த சரப்ஜித், அங்குதான் பிரெஞ்ச் கற்க தொடங்கியுள்ளார். அப்போதுதான் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து இந்தியா திரும்பி வந்து, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதற்கிடையில், இவருக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் பள்ளியில், தனது மகளை சேர்த்துவிட்டு, அங்கேயே ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக அவர், பள்ளிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில், வாடகை வீடு ஒன்று பிடித்து, அதில் வசித்து வந்தது தெரியவந்தது.

ஆசிரியை சரப்ஜித் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியாத நிலையில், அவரின் முதல் கணவர் மீது தான் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர், காலையில் இருந்து துப்பாட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு, அப்பகுதியில் சுற்றி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. சரப்ஜித் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SHOT #GUN #FIRE #TEACHER #DAUGHTER