யாருக்கும் 'கொரோனா' இல்ல... ஆனாலும் பள்ளி, கல்லூரிகளை 'காலவரம்பின்றி' இழுத்து மூடிய அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 13, 2020 05:10 PM

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

Coronavirus: Madhya Pradesh government Shuts School & Colleges

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் கால வரையின்றி இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட மாணவர்களின் நலன்கருதி இந்த முடிவினை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக டெல்லி, ஜம்மு, கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் சுமார் 76 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.