‘கோயிலுக்கு போயிருந்த பெற்றோர்’.. ‘வீட்டில் தனியாக இருந்த மகன்’.. சென்னையில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 13, 2020 02:03 PM

தாம்பரம் அருகே பள்ளி மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai School Student commits suicide near Tambaram

சென்னை தாம்பரம் அடுத்த மாந்தோப்பு தங்கவேலு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பொன்னுரங்கம் (50). இவரது மகன் பாலாஜி (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பாலாஜியின் பெற்றோர் வல்லக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர்.

சாமி கும்பிட்டு விட்டு பொன்னுரங்கமும் அவரது மனைவியும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பாலாஜியின் அறை கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கை அறையின் மின்விசிறியில் பாலாஜி தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியை அடைந்த பாலாஜியின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #SCHOOLSTUDENT #CHENNAI #TAMBARAM