'வீட்டின் தனி அறைக்குள் சென்ற மாணவி'.. சந்தேகப்பட்டு பார்த்த அம்மாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 06, 2020 04:49 PM

நாகர்கோவில் நித்தரவிளை அருகே உள்ள பூத்துறை காருண்யபுரம் பகுதியைச் சேர்ந்தவ ராஜி என்பவரது 19 வயது மகள் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியில் விளையாட்டு விழா நடப்பதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்று அம்மாணவி கேட்டதாகவும், அனால் அவரது பெற்றோர் பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

college student commits suicide in nagercoil மாணவி தற்கொலை

இதனை அடுத்து மாணவி தன் வீட்டில் உள்ள அறை ஒன்றுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காத மாணவியின் செயலால் சந்தேகம் அடைந்த தாயார் ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தபோதுதான், மாணவி மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்துள்ளார். உடனே பதறிய, அவர் உடனடியாக கதவை உடைத்து தன் மகளை மீட்டு, அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார். ஆனால் போகும் வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.