‘இவ்வளவு டிஎம்சி காவேரி தண்ணிய தமிழ்நாட்டுக்கு குடுங்க காவேரி மேலாண்மை வாரியம் அதிரடி’.. கலக்கத்தில் கர்நாடகா!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 28, 2019 04:44 PM
ஜூன் மாதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 9.2 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3 வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜூன் மாதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி நீரை வழங்க உத்தரவிட வேண்டும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அரசு அளித்துள்ள மேகதாது திட்டத்திற்கான விரிவான அறிக்கைக்கு தமிழக அரசு சார்பில் இக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, ஜுன் மாத இறுதிக்குள் காவிரியில் இருந்து 9.2 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.