“தென்னிந்திய திருடர் குல திருவிழா”!... என்னடா இது புதுசா இருக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 07, 2019 06:53 PM

சென்னையில் பல இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.

Thieves in Chennai will participate in festival which will held in AP

சென்னை உள்ள ஏழுகிணறு பகுதியில், கடந்த 30 ஆம் தேதி அதிகாலையில் 4 வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர்கள் இருவரும் சென்னையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு, நெல்லூர் மாவட்டம் கசந்தரில் நடக்கும் “திருடர் குல விழாவில்” தவறாமல் பங்கேற்று வருவதாக கூறியுள்ளனர்.

மேலும், முழு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நடக்கும் இந்த விழாவில் ஆட்டம், பாட்டம் என பல்வேறு கொண்டாடங்கள் அரங்கேறும் என்று கைது செய்ப்பட்ட கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தென்னிந்தியாவில் உள்ள பெரிய திருடர்கள் அனைவரும் கலந்துகொள்வதால், அவர்களிடம் இவர்களை போன்ற திருடர்கள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள இந்த விழாவில் கலந்துகொள்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #THIEVES #FESTIVAL #ANDHRA PRADESH #TAMILNADU