'22 கேமிரா.. போனில் ஸ்பைவேர்.. ஒரு டிடக்டிவ்.. ஓடவும் ஒளியவும் முடியாது'.. மனைவியை சந்தேகித்த கணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 22, 2019 03:01 PM

மனைவியின் நடத்தையை நூதன தொழில்நுட்பங்களைக் கொண்டு கண்காணித்த கனவரின் தலையில், மகனின் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு மனைவி தாக்கியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

Husband tailed wife using 22 cameras, spyware on cellphone - Bizarre

2007-ஆம் ஆண்டு, பெங்களூரில் ஒரு மழைநாள் மாலையில், பெண் பார்க்க போனார் ஐடி ஊழியர் சுதர்சன். அங்குதான் கல்யாணப் பெண்ணுக்கு பதிலாக கல்யாண பெண்ணின் தங்கையின் அழகை பார்த்து வியந்து தாக்கப்பட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டாரோ, அந்த பெண் கல்லூரி படிப்பதால், 3 வருடம் காத்திருக்கச் சொல்கின்றனர். 

3 வருட காத்திருப்புக்கு பின்,  2010-ஆம் ஆண்டு வினயா எனும் அந்த பெண்ணை திருமணம் செய்தார் சுதர்சன். திருமணமாகி 11 வருடங்கள் ஆகி, ஒரு மகன் இருக்கும் நிலையில், தன் மனைவி வினயா மீது சந்தேகப்பட தொடங்கினார் சுதர்சன். ஆம், அவரின் நடத்தை மீது சந்தேகப்பட்ட சுதர்சன், தான் ஒரு டெக்கி என்பதால், வீடு முழுவதும், சுற்றிச்சுற்றி தெரியாத வகையிலான, தனது போன் ஆப்புடன் இணைக்கப்பட்ட 22 நவீன கேமிராக்கள்,  வீட்டை விட்டு வெளியே சென்றால் தெரிந்த ஒரு டிடக்டிவ் வைத்து கண்காணிப்புது என்றிருந்துள்ளார் சுதர்சன்.

ஒருவேளை அந்த டிடக்டிவால் சரியாக ஃபாலோ பண்ண முடியாத நாட்களில் ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு, தானே நேரடியாகக் களமிறங்கி ஒரு கேமிராவை எடுத்துக்கொண்டு மனைவி செல்லும் இடமெல்லம் பின் தொடர்ந்து கண்காணிப்பாராம் சுதர்சன். அப்படித்தான் ஒருநாள் செல்போன் ஒன்றை மனைவிக்கு கிஃப்டாக அளிக்கும் சாக்கில், அதனுள் ஸ்பைவேர் எனப்படும் மென்பொருளை வைத்துக்கொடுத்துள்ளார். அதன் மூலம் மனைவியின் போன் கால்கள், மெசேஜ்கள் என அனைத்தியும் கேட்டுள்ளார். பார்த்துள்ளார்.

ஒருநாள், மனைவியை கையும் களவுமாக பிடித்துவிட்டதாக நினைத்து, தான் எடுத்த போட்டோ ஒன்றைக் காட்டி, மனைவியிடம் அந்த போட்டோவில் இருக்கும் இளைஞன் யார் என்று கேட்டுள்ளார். ஆனால் அது தன் உறவினர் மகன் என்று விளக்கம் அளித்த மனைவியிடம் தலைகுனிந்து போனார் கணவர். எனினும் தன்னை சந்தேகப்பட்டதற்காக கோபப்பட்ட மனைவி மகனின் கிரிக்கெட் பேட்டினை எடுத்து கணவர் தலையிலேயே அடி கொடுக்க, அடி தாங்காமல் போலீஸ் ஸ்டேஷன் வந்து மனைவி மீது கணவர் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க, இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் களைய, இருவருக்கும் கவுன்சிலிங் அட்டென் பண்ணச் சொல்லி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தனை தொழில்நுட்பத்தையும் மனைவியை சந்தேகிப்பதற்காக பயன்படுத்திய கணவர் மீது அதிருப்தி அடைந்த மனைவி விவாகரத்து கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #BENGALURU #HUSBANDANDWIFE #TAIL #CAMERA #KARNATAKA #CCTV #SURVEILLANCE