“தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா? ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”?... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 08, 2019 03:02 PM

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனைகள் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

In TN 46 voting booth has faced problems to solve there is re-election

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்த 46 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, வாக்கு இயந்திரம் பற்றாகுறை மற்றும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர், அந்த மாதிரி வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகளை அழித்துவிட்டு வாக்குப்பதிவு தொடங்கவேண்டும் ஆனால் இந்த 46 வாக்குச்சாவடிகளில் சிலவற்றில் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. இதனால், வாக்குப்பதிவில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். மேலும் மறுவாக்குப்பதிவுக்கான முடிவை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார்.

மேலும், எதிர்கட்சிகள் வாக்கு இயந்திரம் மாற்றம் தொடர்பாக எழுப்பிய பிரச்சனைக்கு விளக்கமளித்து பேசியவர், இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தயாராகவே தேனி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு
வாக்குபதிவு இயந்திரங்களை கொண்டு சென்றதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Tags : #ELECTIONCOMMISSION #LOKSABHAELECTIONS2019 #TAMILNADU #SATHYA PRADA SAHU #RE-ELECTION