வாவ்.. 'இப்படி' ஒரு பொறுப்பில் இருக்கும் மகனுக்கு 'இப்படி' ஒரு அப்பாவா? குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 13, 2019 01:45 PM
கர்நாடகாவைச் சேர்ந்த 74 வயது முத்தண்ணா பூஞ்சாவின் புகைப்படம்தான் இப்போது வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
எளிமையாக லுங்கி சட்டையில், பால்கேனுடன் சைக்கிளில் வலம்வரும் இவர், கர்நாடகாவின் பெல்தன்கடி எம்.எல்.ஏ ஹரிஷ் பூஞ்சாவின் தந்தை என்பதே இதில் ஆச்சரியம். கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டத்துக்கு உட்பட்ட, கர்டடி கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் இவர், இன்றும் விவசாயத்தையே தொழிலாக செய்து வருவதாகக் கூறுகிறார்.
தினமும் காட்டில் விழுந்து கிடக்கும் பாக்குகளைச் சேகரிப்பது, சைக்கிளில் சென்று பால் விநியோகிப்பது உள்ளிட்டவையே தனது அன்றாட வேலை என்கிறார். இவரது மகன் ஹரிஷ் பூஞ்சா கடந்த ஆண்டு பெல்தன்கடி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுபற்றி பேசிய ஹரிஷ் பூஞ்சா, “எங்களுடையது ஏழ்மையான குடும்பம். விவசாயத்தைச் சார்ந்தே நாங்கள் வளர்ந்துள்ளோம். அவருடைய (அப்பா) வாழ்க்கை அதைச் சுற்றியே அமைந்துள்ளது. அதானால்தான் நான் எம்.எல்.ஏ ஆன பிறகும் அப்பா அதையேத் தொடர்ந்து செய்து வருகிறார்” என்கிறார்.
மகன் எம்.எல்.ஏ-வாக ஆன பிறகும் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாகவே வாழும் முத்தண்ணாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.