ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?.. எந்த இணையதளங்களில் பார்க்கலாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 07, 2019 02:02 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளது என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

plus 1 result will be release on tomorrow in tamilnadu and puducherry

தமிழகத்திற்கு கடந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.gov.in இணையதளங்கள் மூலம் பெறலாம்.

மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தப் பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, தேர்ச்சி அடையாத பாடங்களை மட்டும் சேர்த்து எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags : #PLUS1 #RESULTS #TAMILNADU