‘இது ஒன்னு போதும் இந்தியா தான் உலகக் கோப்பைல..’ பிரபல முன்னாள் வீரர் நம்பிக்கை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 28, 2019 04:16 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடையே இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

india will dominate in world cup with great bowlers says brett lee

மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் அணிகளின் பலம், பலவீனம், ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது எனத் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்திய அணி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ.

உலகக் கோப்பை குறித்து பேசும்போது, “இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான நிலையில் உள்ளது. முகம்மது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா என நிறைய இளைஞர்கள் அணியில் உள்ளனர். இந்திய அணி பந்து வீச்சில் மிக ஆரோக்கியமாக உள்ளது. பேட்ஸ்மென்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இதுபோன்ற பந்து வீச்சாளர்களுடன் இந்தியா கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்த முடியும்” எனக் கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #BRETLEE