'தமிழகத்தின் முக்கிய இடங்களில் 'தீவிரவாத தாக்குதல்'...கிளம்பிய பீதி...'லாரி டிரைவர்' கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 27, 2019 11:29 AM

தமிழகத்தில் முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநரை,போலீசார் கைது செய்துள்ளனர்

Ex-Army man arrested for making hoax call

நேற்று பெங்களூர் காவல்துறையினர்,தமிழக காவல்துறையினருக்கு அனுப்பிய எச்சரிக்கை கடிதம் அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.அதில், தமிழகத்தில் ரயில் நிலையங்கள்  உள்ளிட்ட  இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்தனர். பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர மூர்த்தி என்பவர் தகவல் அளித்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து உஷாரான தமிழக காவல்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.மேலும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததால்,பாம்பன் பாலத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என பெங்களூரு காவல்துறையினர் உறுதி செய்தனர். வெடிகுண்டு வதந்தி பரப்பிய சுந்தர மூர்த்தியை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

65 வயதான சுந்தர மூர்த்தி தற்போது லாரி ஓட்டுநராக இருப்பதாகவும், இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு வதந்தி பரப்பியது ஏன் என அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.