'தாயாக மாறிய சிறுமி'...'எங்க அம்மா சாப்பிடணும்'...காண்போரை 'அழ வைத்த சிறுமியின் செயல்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 28, 2019 09:50 AM

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும்,தனது தாய்க்கு தானே தாயக மாறிய சிறுமியின் செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

6-year-old girl has been begging for feed her mother

கர்நாடகா மாநிலம் கோப்பால் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி பாக்யஸ்ரீ.இவரது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால்,பாக்யஸ்ரீயும் அவரது தாயும் தனியாக வசித்து வந்தார்கள். இதனிடையே பாக்யஸ்ரீயின் தாய்க்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது.அப்பா இல்லாத காரணத்தால், அம்மாவை மட்டுமே நம்பி இருந்ததால், அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.இருப்பினும் தனது தாயினை மருத்துவமனையில் பாக்யஸ்ரீ அனுமதித்தாள்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் தாய்க்கு முறையாக உணவு கூட அளிக்க முடியவில்லை.இதனால் வேறு வழி இல்லாமல் மருத்துவமனையில் சுற்றி இருந்த பகுதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தாள்.பிச்சை எடுத்து மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தனது தாய்க்கு உணவு வாங்கி ஊட்டினார்.இது மருத்துவமனையில் இருந்தவர்களை நெகிழ செய்தது.இதனிடையே இந்த விவகாரம் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு செல்ல,அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து குழந்தைகள் நல பிரிவு மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறையினை சேர்ந்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று பாக்யஸ்ரீ மற்றும் அவரது தாயினை சந்தித்தார்கள்.இதையடுத்து அவருக்கு முறையான சிகிச்சையினை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.தாய் கவனித்து கொள்ள வேண்டிய வயதில் இருக்கும் மகளோ,தானே தாயக மாறி தனது தாய்க்காக பிச்சை எடுத்த சம்பவம்,கல் மனதையும் கலங்க செய்துள்ளது.

Tags : #KARNATAKA #KOPPAL #BEGGING #ALCOHOLISM #STATE WOMEN & CHILD WELFARE #6-YEAR-OLD GIRL