'இப்ப இதுக்கும் டூப்ளிகேட் வந்துருச்சா'.. சிக்கிய ஃபாரின் கும்பல்.. மிரளவைக்கும் தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | May 09, 2019 04:44 PM
சென்னையில் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து அதன் மூலம் பண மேசடியில் ஈடுபட்ட பல்கேரியாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் வேலிக்கோ மற்றும் லயன் மார்க்கோவா என்பவர்கள் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி மற்றவர்களின் ஏடிஎம் தகவல்களை திருடி அதேபோன்ற போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து சென்னையில் உள்ள வெவ்வேறு ஏடிஎம்களில் பணம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஓட்டல் ஊழியர் அந்த நபர்கள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்தபோது ஏடிஎம் டிகோடர் இயந்திரம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் ஓட்டல் மேனேஜர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஓட்டல் மேனேஜர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஓட்டல் மேனேஜர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 45 போலி ஏடிஎம் கார்டுகள், லேப்டாப், ஏடிஎம் டிகோடர் மற்றும் 10 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைது செய்ப்பட்ட இருவரையும் மத்திய குற்றபிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவர்கள் ஓப்படைக்கபட்டனர். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவரிடமும் மத்திய குற்றபிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.