நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 09, 2019 07:09 PM

நள்ளிரவு நேரத்தில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்னை கேரளாவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சைரன் ஒலியை எழுப்பி காப்பாற்றியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

Kerala Ambulance driver saves tamil couple in midnight

கேரளாவின் திருச்சூரில் நள்ளிரவு  1 மணி அளவில் தியேட்டரில் திரைப்படம் பார்த்துவிட்டு தமிழக காதலர்கள் எம்ஜி சலை வழியாக நடந்து வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் அங்கு வந்து அந்த தமிழ்ப் பெண்ணின் காதலரை அடித்து கீழே தள்ளிவிட்டு,  அந்த பெண்ணைத் தாக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த ஆபத்பாந்தவன்கள்தான் ஆம்புலன்ஸ் டிரைவர் ஜானிக்குட்டியும், அவரது உதவியாலர் ஷித்தினும். அவர்கள் தங்கள் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கும்போது இந்த அநீதியைப் பார்த்ததும் பதறியுள்ளனர். உடனே ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு, இருவரும் அந்த பெண்ணைக் காப்பாற்றச் சென்றுள்ளனர். அதில் ஷித்தினை அந்த மர்ம நபர் பளிக்குக் கல் கொண்டு பலமாக தாக்கியுள்ளார். செய்வதறியாது தவித்த டிரைவர் ஜானிக்குட்டி சமயோஜிதமாக யோசித்து, ஆம்புலன்ஸின் சைரனைச் சென்று அலறவிட்டுள்ளார். உடனே அங்கு சிலர் கவனம் கொடுத்து வந்துள்ளனர்.

அவர்களின் உதவியுடன் அந்த மர்ம நபரை பிடித்துத் தாக்கியுள்ளார் ஜானிக்குட்டி. இதனிடையே சத்தம் கேட்டு போலீஸார் வரவும் அந்த மர்ம நபர் தப்பிக்க முயற்சிக்க, அப்போது கூடியிருந்த மக்கள் அவரை பிடித்து போலீஸரிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது காதலரும் ஆம்புலன்ஸ் டிரைவரின் உதவியாளர் ஷித்தினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பணம் பறிப்பதா, பாலியல் சீண்டலா, அந்த நபரது நோக்கம் என்ன? அல்லது அவர் சைகோவா என்பன போன்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #KERALA #TAMILNADU #HEARTMELTING #HELP #SAVE