‘3 புள்ளைக்கும் சொத்த கொடுத்துட்டு’.. ‘ஒருவேளை சாப்பாட்டுக்கு, படுக்க இடமில்லாம அனாதையா சுத்துரேன்’ முதியவர் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 06, 2019 11:25 PM

பெற்ற பிள்ளைகளால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட முதியவர் இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

Old man left lonely after gave his properties to his sons

திருவாரூர் மாவட்டம் அதம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் கோவிந்தராஜ். இவருக்கு உதயக்குமார், ரமேஷ், மணிகண்டன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். வயதானதால் தான் பராமரித்து வந்த தனது விளைநிலைங்களை மூன்று மகன்களுக்கும் முதியவர் கோவிந்தராஜ் பிரித்து கொடுத்துள்ளார். சில மாதங்கள் முதியவரை வீட்டில் வைத்து கவணித்து வந்த மகன்கள் திடீரென வீட்டைவிட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முதியவர் கோவிந்தராஜ் வீட்டைவிட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வயதான காலத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றிய மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய முதியவர், ‘ மூணு பிள்ளைகளையும் நான் விவசாயம் பாத்து எந்த கஷ்டமும் தெரியாம வளர்த்தேன். மூணு பிள்ளைகளை பெத்து என்ன புண்ணியம். இப்போ படுக்க இடமில்லாம, சாப்பிட சாப்பாடு இல்லாம ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன். எனக்குனு எதும் வச்சிக்காம என் சொத்த மூணு பேருக்கும் பிரிச்சு கொடுத்தேன். இன்னைக்கு நான் அனாதையா சுத்திட்டு இருக்கேன். அதான் என்னோட நிலைமையை மனுவா எழுதி கலெக்டர் கிட்ட கொடுத்திருக்கேன். அவர் நடவடிக்கை எடுப்பாரு நம்பிக்கை இருக்கு. இங்ககூட யாரோ ஒருத்தர் நாலு இட்லி வாங்கி கொடுத்தாரு இந்த நிலையிலதான் நான் இருக்கேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

Tags : #TAMILNADU #COLLECTOR #PETITION