அண்ணே 'சிக்கன் 65' செஞ்சு குடுக்க மாட்றாரு... நீ அங்கேயே இரு 'நாங்க' வரோம்... சகோதரர்களால் 'மாஸ்டருக்கு' நேர்ந்த கொடூரம் !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 11, 2020 01:35 PM

சிக்கன் 65 செய்து தராததால் தன்னுடைய சகோதரர்களை வரவழைத்து, ஹோட்டல் மாஸ்டரை வாலிபர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Brothers attacked Hotel Master on Puducherry, details

புதுச்சேரி மாநிலம் வானூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(44) என்பவர் சேதாரப்பட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று இரவு சுரேஷ் ஹோட்டலை மூடிவிட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது குடிபோதையில் வந்த பன்னீர் என்பவர் சிக்கன் 65 செய்து தருமாறு கேட்டுள்ளார். பதிலுக்கு சுரேஷ் வியாபாரம் முடிந்து விட்டதால் ஹோட்டலை மூடப்போகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதைக்கேட்ட பன்னீர் தகாத வார்த்தைகளால் சுரேஷை திட்டிவிட்டு, போன் போட்டு தன்னுடைய சகோதரர்களிடம் இதுகுறித்து தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து பன்னீரின் சகோதரர்களான அய்யனார் மற்றும் ரமேஷ் இருவரும் ஹோட்டலுக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் பன்னீருடன் சேர்ந்து அங்கிருந்த சல்லிக்கரண்டியை எடுத்து சுரேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஹோட்டல் உரிமையாளர் சுரேஷை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுரேஷ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க அவர்கள் வழக்குப்பதிவு செய்து அய்யனார், பன்னீர் இருவரையும் கைது செய்துள்ளனர். ரமேஷை தேடி வருகின்றனர். 

Tags : #POLICE