அய்யோ பாத்துட்டேன் எங்க 'அண்ணன' பாத்துட்டேன் ... 'கைப்' எடுத்த கேட்ச் ... 90 ஸ் 'கிட்ஸ்'களின் நாஸ்டால்ஜிக் தருணங்கள் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 11, 2020 01:33 PM

இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முஹம்மது கைப் எடுத்த இரு கேட்ச்களை 90 ஸ் கிட்ஸ்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Mohammed Kaif takes an excellent catch in Yesterday match

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டுள்ள ரோடு சேப்டி உலக சீரியஸ் போட்டி தொடரில் நேற்று இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. இன்னிங்ஸின் எட்டாவது ஓவரை இந்திய பந்து வீச்சாளர் முனாப் படேல் வீசினார். பந்தை எதிர்கொண்ட தில்ஷன், லெக் சைடில் அடிக்க அங்கு நின்ற முகமது கைப் அருமையாக கேட்ச் செய்தார். அதே போல கபுகேதராவின் காட்சியும், கைப் மிக அருமையாக எடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் பீல்டிங்கிற்கு பெயர் போனவர் முகமது கைப்.  முழுவதுமாக புதிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஆடிக் கொண்டிருக்கையில், பல நாட்களாக இவரது பீல்டிங்கை காணாமல் இருந்த வந்த 90 ஸ் கிட்ஸ்களின் சிறு வயது நாட்களை இந்த இரு கேட்ச்கள் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #MOHAMMAD KAIF #CRICKET #ROAD SAFETY SERIES