'ஸப்பா என்ன சூடு...! அட, கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்...' 'அடேய் யாரவது என்ன காப்பாத்துங்கடா...' பாட்டிலுக்குள் தலையை உள்ளே விட்டு போராடிய பாம்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 26, 2020 11:15 AM

கேரளாவில் பாம்பு ஒன்று கூல்ட்ரிங்ஸ் பாட்டிலுக்குள் தலையை நுழைத்து எடுக்க முடியாமல் போராடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

a snake struggled to get his head into a bottle of cool drinks

கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள வலபாடுபீச் மாலாவளவு பகுதியில் வசித்து வருபவர் லைலா. நல்ல வெயில் அடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவரது வீட்டின் அருகே ஒரு பாம்பு வந்தது. அப்போது அந்த பாம்பின் கண்களில் அங்கு வீசப்பட்டு கிடந்த ஒரு காலி குளிர்பான டப்பா தெரிந்தது. எனவே குளிர்பான டப்பாவுக்குள் ஏதேனும் குடிக்க கிடைக்கும் என்ற ஆசையில் அதன் உள்ளே பாம்பு தலையை விட்டது. ஆனால் அதற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பின்னர் அந்த பாம்பு குளிர்பான டப்பாவுக்குள் சிக்கிய தலையை வெளியே எடுக்க முடியாமல் போராடியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் அங்கு கூடிவிட்டனர். அப்போது மரணபயத்தில் பாம்பு அங்குமிங்கும் ஊர்ந்து சென்றது. மேலும் அதன் சீற்றம் அதிகம் இருந்தது. அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் விரைந்து வந்து டப்பாவுக்குள் சிக்கிய நல்லபாம்பின் தலையை லாவகமாக வெளியே எடுத்து அதை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த காட்டிற்குள் கொண்டுப்போய் விடப்பட்டது.

Tags : #SNAKE