VIDEO: பார்சலுக்குள் இருந்த ‘கல்யாண பத்திரிக்கை’.. ‘பிரிச்சு பாத்து மிரண்டுபோன அதிகாரிகள்’.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 24, 2020 03:55 PM

திருமண அழைப்பிதழில் போதைப்பொருளை மறைத்து கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Drug worth Rs 5 crore found in Invitation cards at Bengaluru Airport

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கெம்பே கவுடா விமான நிலையத்தின் சரக்கு பெட்டகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பட உள்ள பார்சலை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் எதோ துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகம் அதிமாகவே பார்சலை பிரித்துப் பார்த்துள்ளனர். அதற்குள் திருமண அழைப்பிதழ் அட்டைகள் இருந்துள்ளன.

இதனை அடுத்து அழைப்பிதழ் அட்டையை கிழித்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அழைப்பிதழுக்குள் வெள்ளை நிறத்தில் பவுடர் போன்று பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை சோதனைக்கு உட்படுத்தியதில், அது மருத்துவர்கள் மயக்க மருந்தாக பயன்படுத்தும் எபெட்ரின் (Ephedrine) என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் போதை பயன்பாட்டிற்காக திருமண அழைப்பிதழுக்குள் மறைத்து அனுப்பட்டது தெரியவந்துள்ளது.

மொத்தம் 43 திருமண அழைப்பிதழில் இருந்து 86 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 கிலோ எடையுள்ள இவற்றின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பார்சல் மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை அச்சடித்த அச்சகம் மற்றும் மதுரையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #BENGALURU #AIRPORT #EPHEDRINE #INVITATIONCARDS #DRUG