திருமணமான மறுநாள் ‘சுருண்டு விழுந்த புதுப்பெண்’.. கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’.. ‘நிலைகுலைந்துபோன’ குடும்பத்தினர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 02, 2019 06:21 PM

ஆந்திராவில் திருமணமான மறுநாள் புதுப்பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவத்தால் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

Andhra Newlywed Bride Dies Of Heart Attack A Day After Marriage

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கருடகாண்டி கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் சுரேஷ் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அடுத்த நாள் பெண் வீட்டில் சில சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு புதுமணத் தம்பதி மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென புதுப்பெண் தமயந்தி சுருண்டு விழுந்து மயங்கியுள்ளார்.

இதைப் பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக தமயந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன புதுமாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். பின்னர் தமயந்தியின் உடலுக்கு அவருடைய கணவர் கோபிநாத் சுரேஷ் இறுதி சடங்குகளை செய்துள்ளார். திருமணமான மறுநாளே புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ANDHRAPRADESH #MARRIAGE #BRIDE #HEARTATTACK #HUSBAND